×

பிச்சை மூப்பன் வலசையில் மீண்டும் படகு சவாரி

கீழக்கரை : ஏர்வாடி பிச்சை மூப்பன் வலசையில் கடல் நடுவே மணல் திட்டு உள்ளது. இந்த மணல் திட்டுக்கு தமிழ்நாடு உள்பட கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் படகு சவாரி மூலம் கடலுக்குள் சென்று மணல் திட்டை காண்பதற்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தற்போது இரண்டு படகுகள் மூலம் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் சென்று மணல் திட்டை கண்டு ரசித்து வந்தனர். இந்நிலையில் படகு சவாரி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே செயல்படும். இதனால் வெளியூர்களில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை இருந்து வந்தது. இதுகுறித்து உயிர்கோள காப்பக துணை மண்டல அலுவலர் கனகராஜ், கூடுதல் கண்ணாடி படகு வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதலாக ரூ.15 லட்சம் செலவில் ஒரு கண்ணாடி படகு கீழக்கரை கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டது. அதனை ஏர்வாடி பிச்சை மூப்பன் வலசைக்கு வனத்துறை அதிகாரிகள் கடல் வழியாக கொண்டு சென்றனர். கூடிய விரைவில் மீண்டும் படகு சவாரி தொடங்குவதற்கு அரசு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது….

The post பிச்சை மூப்பன் வலசையில் மீண்டும் படகு சவாரி appeared first on Dinakaran.

Tags : Beggar Moopan Valasai ,Shore ,Airwadi Pichai Moopan Valasai ,Tamilnadu ,
× RELATED ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு...